திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2017 (19:46 IST)

நிலவேம்புக்கு நான் எப்போது எதிர்ப்பு தெரிவித்தேன்? கமல் திடீர் பல்டி

கமல்ஹாசன் ஒரு நிஜமான அரசியல்வாதி என்பதை நிரூபிக்கும் வகையில் நேற்று கூறியதை இன்று மாற்றி சொல்லும் வகையில் தேறிவிட்டார் என்றே கூற வேண்டும்



 
 
நிலவேம்பு குடிநீர் குறித்து சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன் என்று நேற்று தெரிவித்த கமல், இன்று நான் நிலவேம்பு குடிநீரை எதிர்க்கவில்லை என்றும், நற்பணி இயக்கத்தினர் அதை கொடுக்க வேண்டாம் என்று மட்டுமே கூறியதாக திடீர் பல்டி அடித்துள்ளார்.
 
நான் கடவுள் இல்லையென்று கூறவில்லை, இருந்தால் நல்லா இருக்கும் என்றுதான் கூறினேன் என்று ஒரு படத்தில் வசனம் பேசிய கமல், அதே பாணியை நிலவேம்பு விஷயத்திலும் பின்பற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.