மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடாதது ஏன்? இரண்டு முக்கிய காரணங்கள்
பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சுறுசுறுப்பாகினர். பிரியங்காவை போட்டியிட வைத்தால் வெற்றி பெற செய்வது எங்கள் பொறுப்பு என வாரணாசி காங்கிரஸ் நிர்வாகிகள் சபதமேற்றனர். ராகுல்காந்தியும் கிட்டத்தட்ட இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
ஆனால் தற்போது பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவரது சொத்து மதிப்பை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய நிலை வரும். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஒருசில வழக்குகளில் சிக்கியுள்ளதால் இந்த நேரத்தில் சொத்து மதிப்பை வெளியிடுவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அவர் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது
மேலும் பிரதமரை எதிர்த்து போட்டியிடுவது என்பது ரிஸ்க் என்றும், பிரியங்கா தான் சந்திக்கும் முதல் தேர்தலிலே தோல்வி அடைந்தால் அவரது இமேஜ் பாதிக்கும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறினார்களாம். இதனால்தான் பிரியங்கா போட்டியிடவில்லை என கூறப்படுகிறது
இருப்பினும் அமேதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றால், பிரியங்காவை அமேதி தொகுதியில் போட்டியிட வைக்கும் திட்டம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ளதாம். அல்லது வரும் 2022ஆம் ஆண்டு உபி சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பிரியங்காவை அறிவித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கும் திட்டம் ஒன்றும் இருப்பதாகவும் கூறப்படுகிறது