அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது - வாரணாசியில் மோடி வேட்புமனுத்தாக்கல் !

Last Modified வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:10 IST)
பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட உள்ள தொகுதியான வாரனாசியில் சற்று முன்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் கடந்த தேர்தலில் தான் போட்டியிட்ட உத்தரபிரதேச மாநில வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.  இந்த தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வாரணாசி வந்தார்.

அங்கு மிக பிரம்மாண்டமாக இரண்டு நாட்கள் ஊரவலம் ஒன்றை நடத்திய மோடி அதன் பின்னர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத்தாக்கல் தொடர்பான நடைமுறைகள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரசுக்கு ஆதரவான அலை மக்களிடம் உள்ளதாக தெரிவித்தார்.இதில் மேலும் படிக்கவும் :