வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (08:49 IST)

மோடி–சீன அதிபர் சந்திப்பு டெல்லியில் நடக்காதது ஏன்?

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. பொதுவாக வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும்போது இரு தலைவர்களும் டெல்லியில் சந்தித்து பேசுவதுதான் வழக்கம். ஆனால் சீன அதிபருடனான சந்திப்பு சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் நடப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது

இந்த நிலையில் பிரதமர் – சீன அதிபர் சந்திப்பு டெல்லியில் நடந்தால் அங்கு திபெத் மாணவர் இயக்கங்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு, சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் தான் மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திபெத்துக்கு சீனா பல வருடங்களாக தொல்லை கொடுத்து வருவதால் சீன அதிபரின் இந்திய வருகைக்கு திபெத் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்றும் அந்த சந்திப்பு டெல்லியில் நடந்தால் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் திபெத் மாணவர் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் சீன அதிபரின் வருகைக்கு சென்னையில் எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த தகவலை அரசு தரப்பு மறுத்துள்ளது. இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நடக்கவேண்டும் என்று திட்டமிட்டதாகவும், அதற்காக பல இடங்கள் பரிசீலனை செய்து கடைசியில் மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது