வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2019 (09:17 IST)

மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்!!

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும், வருகிற 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இரு நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசுவதற்காக இருவரும் சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்காக பல பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சீன பாதுகாப்பு அதிகாரிகள் சென்னைக்கு ஏற்கனவே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சீன அதிபர் தங்க போகும் ஹோட்டலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி-ஜின்பிங் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐந்து ரதம், கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை , அர்ஜூனன் தபசு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சென்னை-மாமல்லபுரம் சாலையில் அதிபர் பயணிக்கும் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே போக்குவரத்து தடை செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்பொது தற்காலிகமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.