1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (13:41 IST)

அயோத்தி ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை நிறைவு..! ராமர் சிலை பாதத்தில் மலர் வைத்து வணங்கிய பிரதமர்.!!

modi kovil
அயோத்தியில் குழந்தை ராமரின் 51 அடி சிலை கோவில் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வைத்து மனமுருக பிரார்த்தனை செய்தார்.
 
அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா  தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி பிரதமர் மோடி முன்னிலையில் தொடங்கி நடைபெற்றது. ராமர் கோவில் மேல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
 
ayodhya
இந்நிலையில் குழந்தை ராமரின் 51 அடி சிலை கோவில் கருவறைக்குள் நிறுவப்பட்டது. குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பின் அகற்றப்பட்டது. பலராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது.

 
குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி மலர் வைத்து வணங்கினார். நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் குழந்தை ராமர் சிலை முன் மனமுருக வழிபாடு செய்தார். ராமர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்