திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (08:21 IST)

யார் இந்த பசவராஜ் பொம்மை??

கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் வயது மூப்பு காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. 
 
கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலிடத்தின் அறிவிப்பின்படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து விலகினாலும், தனக்கு நெருக்கமான, தனது சமூகத்தைச் சேர்ந்தவரையே முதல்வராக்கியுள்ளார் எடியூரப்பா. 
 
யார் இந்த பசவராஜ் பொம்மை?? 
61 வயதான பசவராஜ், ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகான் தொகுதியிலிருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மெக்கானிக்கல் இன்ஜீனியரான பசவராஜ் பொம்மை, ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கர்நாடக மேலவைக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட பசவராஜ், 2008 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவரானார்.