வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (10:44 IST)

ஒரு முறை கூட பதவிகாலத்தை முழுமையாக அனுபவிக்காத எடியூரப்பா!

எடியூரப்பா ஒருமுறை கூட முதல்வர் பதவியின் ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. 

 
பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு ஓய்வளிக்கப்படும். ஆனால் அப்போதே 76 வயதாகிருந்த எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற நிபந்தனையோடு தான் முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். 
 
1. கர்நாடக மாநில முதல்வராக முதல் முறையாக கடந்த 2007 நவம்பர் 12 ஆம் தேதி பதவியேற்ற எடியூரப்பா 19 ஆம் தேதி ராஜினாமா செய்ததின் மூலம் 8 நாட்கள் முதல்வராக இருந்தார். 
2. இரண்டாவது முறையாக 2008 மே 30 ஆம் தேதி பதவியேற்று 2011 ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 1,158 நாட்கள் முதல்வராக இருந்தார்.
3. 3வது முறையாக 2018 மே 17 ஆம் தேதி பதவியேற்று 23 ஆம் தேதி வரை 7 நாட்கள் இருந்தார். 
4. நான்காவது முறையாக 2019 ஜூலை 26 ஆம் தேதி பதவியேற்று 2021 ஜூலை 26 ஆம் தேதி வரை 730 நாட்கள் இருந்தார். 
5. தற்போது இரண்டு ஆண்டுகள் முதல்வராக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
அதாவது மொத்தம் நான்கு கட்டங்களில் 1,927 நாள் மாநில முதல்வராக இருந்துள்ளார். ஒருமுறை கூட 5 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை.