திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (18:54 IST)

யார் இந்த அமித் ஷா? இந்த விஷயத்தில் தலையிடுவது தவறானது: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு

அரசு அளித்த நிதிக்கான கணக்கு வழக்குகளை கேட்க அமித் ஷா யார் என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

 
தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின் அமராவதி ஆந்திரா மாநிலத்தின் தலைநகரமாக்கப்பட்டது. இந்த புதிய தலைநகர கட்டமைப்புக்காக மத்திய அரசு நிதியுதவி வழங்கியது. மத்திய அரசு வழங்கிய நிதியுதவு போதாது என்று ஆந்திரா முதல்வர் மேலும் நிதியுதவி கோரினார்.
 
இதற்கு பாஜகவின் தேசிய தலைவர் அரசு அளித்த நிதியுதவிக்கு சரியான கணக்கு வழக்கு ரசீதுகளை மத்திய அரசுக்கு அளிக்கவில்லை. இந்நிலையில் மேலும் நிதியுதவி தேவை என கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.
 
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கோபத்துடன் பதிலளித்துள்ளார். அமித் ஷா பாஜகவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் மட்டுமே உள்ளார். இப்படி இருக்க மத்திய அரசு அளித்துள்ள நிதிக்கு கணக்கு கேட்க இவர் யார்? 
 
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் அல்லது நிதியமைச்சகம் மட்டுமே கேள்விகள் கேட்க முடியும். நிதி விவரங்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள நிலையில் அமித் ஷா இந்த விஷயத்தில் தலையிடுவது மிகவும் தவறானது என்று கூறியுள்ளார்.