1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (17:40 IST)

அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற மேடையில் தீ விபத்து

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைவர்கள் அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற கட்சி பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரே பரெலி நகரில் பாஜக கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் அமித் ஷா, மகேந்தர்நாத் ஆகியோர் பங்கேற்றனர்.
 
அந்த பொதுக்கூட்டத்தில் மகேந்தர்நாத் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது தீடிரென மின்கசிவால் மேடையில் தீபிடித்தது. இதனால் மேடையிலிருந்த தலைவர்கள் கீழே இறங்கினர். 
 
பின்னர் மேடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு சிறது நேரம் பதற்றம் ஏற்பட்டது.