1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (21:03 IST)

கீர்த்தி சுரேஷை பாராட்டிய ஆந்திர முதல்வர்

மகாநதி படத்தைப் பார்த்துவிட்டு கீர்த்தி சுரேஷைப் பாராட்டியிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

 
 
நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த மாதம் ரிலீஸான படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும்  ரிலீஸானது. சாவித்ரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தைப் பார்த்த அனைவரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டி வந்தனர்.
 
இந்நிலையில், தெலுங்கில் வெளிவந்த மகாநதி படத்தை பார்த்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அந்த படக்குழுவினரை வீட்டில் அழைத்து பாராட்டி பேசியதாவது;-
 
” இது மாதிரியான நல்ல கதைகள் மிகவும் அரிதாகத்தான் வருகின்றன. இத்திரைப்படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் அருமையாக நடித்திருக்கிறார். சாவித்திரி பட்ட கஷ்ட நஷ்டங்களை அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்க்காக கேளிக்கை வரி அளிக்க அரசு பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்”