1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (13:53 IST)

யானையுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் பரிதாப பலி!

யானையுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் பரிதாப பலி!
உலகில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதிலிருந்து செல்பி மோகம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பல இளைஞர்கள் தங்களுடைய விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற 21 வயது இளைஞர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் குட்டியை பிரிந்த கோபத்தில் யானை ஒன்று நடமாடிக் கொண்டிருந்த நிலையில் அதன் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் யானையுடன் செல்பி எடுக்க 21 வயது இளைஞர் ஒருவர் முயற்சி செய்தார். 
 
அப்போது கடும் கோபத்தில் இருந்த அந்த யானை இளைஞரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவருடன் வந்த மூன்று நண்பர்கள் யானையிடம் இருந்து தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
இதனை இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க வேண்டாம் என ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருந்தும் இளைஞர்களின் இப்படி பலியாகிக் கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது