திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:07 IST)

’’அதற்கு ஆசைப்பட்டு’ இளைஞருக்கு வீடியோ கால் மூலம் வந்த விபரீதம்

பெங்களூரில் வசித்து வந்த இளைஞர் அம்பித்குமார் திருமணத்திற்காகப் பெண் தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு ஷ்ரேயா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார்.

இருவரும் ஐடி துறையில்தன் பணிபுரிவதாக ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆயினர். பின்னர் ஒருவரும்  மொபைல் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் செல்போனில் வீடியோ கால் செய்து பேசியுள்ளனர்.

அப்பெண் ஒரு தன் ஆடைகளைக் களைந்து, நிர்வாணத்தில் நின்றதுடன், இளைஞரையும் அதேபோன்று நிர்வாணமாக நிற்கும்படி கூறியுள்ளார்.

தான் திருமணம் செய்யப்பொகற பெண் என்பதால் இளைஞர் அவர் சொன்னபடி அப்படிச் செய்திருக்கிறார். இதையடுத்து சில நிமிடங்களில் அப்பெண் அவரிடம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை என்றால் உனது நிர்வாணப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

அவர் கேட்ட பணத்தைக் கொடுத்த அம்பித்குமார் அவரது டார்ச்சரை பொறுக்க முடியாமல் காவல்துறையினரின் உதவிய நாடியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.