1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (21:30 IST)

டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

tirupati
திருமலை திருப்பதி கோயிலில் வரும் டிசம்பர் மாதத்திற்காக ஆர்ஜித் சேவை டிக்கெட்டுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர்  மாதத்திற்கான தாரிசனத்திற்கு, ஆர்ஜித டிக்கெட்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் என்று  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும்,  வரும் டசம்பர் மாதம்  நடைபெறவுள்ள ஆர்ஜித சேவைகளுக்காக டிக்கெட்டுகள் நாளை காலை10 மணி  முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும்,  இங்கு நடைபெறும், ஊஞ்சல் சேவை, சகஸ்வரதீப அலங்கார சேவை உள்ளிட்ட  நிகழ்ச்சிகளை பக்தர்கள் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் இந்தத் தகவலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Edited by Sinoj