செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (20:04 IST)

’’ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது எப்போது ?’’ அமைச்சர் ஜவடேகர் தகவல் !

இந்தியாவில் 4314 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 50 பேர் உயர்ந்ததை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனாவால் பாதிக்க ப்பட்டுள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 91851 பேர் உள்ளனர், அரசு கண்காணிப்பு 205 பேர் என  என்று சற்று முன்னர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரொனாவால் உலக நிலவரம் பற்றி ஓவ்வொரு நிமிடமும் கவனித்து வருகிறது. உரிய நேரத்தில் ஊரடங்கை தளர்த்துவது முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.