தொடர்புடைய செய்திகள்
- இனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம் – புதிய வசதி அறிமுகம்!
- 84 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய கொரோனா நிலவரம்!
- 10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட்: இந்தியாவின் அடுத்த சாதனை
- ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் … இரண்டாவது நாளாக போராட்டம்!
- 77 லட்சத்தை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – இந்திய கொரோனா நிலவரம்!
வாட்ஸ் ஆப் பே வுக்கு அனுமதி…. விரைவில் நாடு முழுவதும் அனுமதி!
வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு என்.பி.சி.ஐ, நேற்று அனுமதி அளித்துள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் பொருட்களின் விலை உள்ளிட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது பேமெண்ட் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின் மூலம் தனிநபர்கள் இலவசமாக, வியாபாரிகள் கட்டணம் செலுத்தியும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குறைந்த பட்ச வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது யுபிஐ இயங்குதளத்தை இயக்கும், என்.பி.சி.ஐ, நேற்று(நவ.,5) அனுமதி அளித்துள்ளது. இதனால் இனிமேலும் நாடு முழுவதும் உள்ள 20 மில்லியன் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கும் இந்த சேவை அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
