1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kerala Home Minister Ramesh Chennithala To Meet Tamil Nadu CM Vijay Today For Joint Anti-Drug Initiatives

தமிழக முதல்வர் - கேரள முதல்வர் இன்று சந்திப்பு.. இருமாநில நலன் குறித்து ஆலோசனை...

முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய்யை, கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று சென்னையில் நேரில் சந்தித்து பேசுகிறார். 
 
அண்டை மாநிலங்களான தமிழ்நாடும் கேரளாவும் தங்களது எல்லைப் பகிர்வு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பில் எப்போதும் இணக்கமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
 
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமே, தென் மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்க இரு மாநிலங்களும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்து தலைவர்கள் தீவிரமாக விவாதிக்க உள்ளனர். குறிப்பாக, எல்லைப் பகுதிகளில் உளவுத் தகவல்களைப் பகிர்வது மற்றும் கூட்டுச் சோதனைகளை நடத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
 
இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக இரு மாநில அரசுகளும் இணைந்து எடுக்கவுள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு தென் மாநிலங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, தமிழ்நாடு - கேரளா இடையேயான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வரும் 2 கொரிய நிறுவனங்கள்.. தொழிற்சாலை அமைக்க 30 ஏக்கர் நிலம் வழங்கும் தமிழக அரசு...