1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Thailand Likely to Halve Visa-Free Stay Duration for Indian Travelers to 30 Days

விசா இல்லாமல் தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி...

passport
விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள இந்திய பயணிகளுக்கு ஒரு முக்கியமான புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைந்து தங்குவதற்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருகிறது. இருப்பினும், இந்த விசா விலக்கு திட்டத்தின் கீழ் இந்தியர்கள் அங்கு தங்குவதற்கான கால அளவு தற்போது பாதியாகக் குறைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
 
இதுவரை விசா இல்லாமல் தாய்லாந்து செல்லும் இந்தியர்கள் அங்கு அதிகபட்சமாக 60 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய தகவல்களின்படி இந்த அதிகபட்ச தங்கும் கால அளவு 60 நாட்களிலிருந்து 30 நாட்களாக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 
 
அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தே, அந்நாட்டு அரசு இந்த அதிரடி முடிவை எடுக்க நேரிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனால், இனிவரும் காலங்களில் நீண்ட நாட்கள் தங்கி தாய்லாந்தை சுற்றிப் பார்க்க திட்டமிடும் இந்திய பயணிகள், தங்களது பயண திட்டங்களை இந்த புதிய கால வரம்பிற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தமிழக முதல்வர் - கேரள முதல்வர் இன்று சந்திப்பு.. இருமாநில நலன் குறித்து ஆலோசனை...