1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:17 IST)

தமிழ்நாட்டில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள் எவை எவை?

மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் சுமார் 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான நடைமுறைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏற்கனவே செய்து வந்த நிலையில் இன்று இந்த பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
இந்த நிலையில் மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில் அதில் தமிழகத்தைச் சேர்ந்த சில சொத்துக்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய அரசின் தேசிய சொத்துக்கள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் தனியாருக்கு விட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
மேலும் தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும் தனியாருக்கு விடப்படவுள்ளன. இந்த பட்டியலில் நீலகிரி மலை ரயிலும் ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 491 தேசிய நெடுஞ்சாலை நிலம் தனியாருக்கு குத்தகைக்கு விடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.