ஏழுமலையான் கோவிலில் தலைமுடி ஏலம் ... எத்தனை கோடி தெரியுமா...?
திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் உள்ள முக்கிய அடையாளங்களுள் ஒன்று. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அன்றாடம் என்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்போது பக்தர்கள் தங்கள் தலைமுடியை நேர்த்திக் கடனாக செலுத்துவது வாடிக்கையாகும்.
தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவே எண்ணற்ற பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண கட்டாவில் வைத்து தம் தலைமுடியை பக்தர்கள் காணிக்கை அளிக்கின்றனர்.
பக்தர்கள் காணிக்கை தரும் தலைமுடிகள் டன் கணக்கில் குவிவதால் அவற்றை கோவில் நிர்வாகம் ஏவல் விடுவது வழக்கமாகும். தற்போது பக்தர்கள் செலுத்திய தலைமுடி 5 ரகங்களாக பிரிக்கப்பட்டு இ - டெண்டர் மூலம் 11,800 கிலோ ஏலம் விடப்பட்டது. இதனால் கோவில் நிர்வாகத்திற்கு ஏலம் வருவாய் 10 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.