90 ரயில் டிரைவர்களுக்கு கொரோனா உறுதி! – ரயில்களை ரத்து செய்த மேற்கு வங்கம்!

Prasanth Karthick| Last Modified புதன், 21 ஏப்ரல் 2021 (09:42 IST)
மேற்கு வங்கத்தில் ரயில்வே டிரைவர்கள் உட்பட 90 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் லோக்கல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மிக வேகமாக அதிகரிக்க தொடக்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துதலை அதிகரித்தல், பகுதி நேர ஊரடங்கை அறிவித்தல் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க ரயில் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் டிரைவர்கள், கார்டுகள் உள்ளிட்ட 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து லோக்கல் ரயில் சேவைகளில் 56 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசியமான வழித்தடங்களில் குறிப்பிட்ட சில நேர வரிசையில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :