வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (08:40 IST)

கொரோனா தொற்று ஏற்பட்ட இளம் நடிகர் மரணம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகர் டி எஸ் மஞ்சுநாத் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில் இளம் நடிகராக வளர்ந்து வந்தவர் டி எஸ் மஞ்சுநாத். அடிப்படையில் தயாரிப்பாளரான இவர் அவர் தயாரித்த படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கொரோனா சோதனை செய்துகொண்ட போது பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.