திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (11:28 IST)

அர்ஜுனன் அம்பு ஒரு அணு ஆயுதம்! – மேற்கு வங்க ஆளுனர் சர்ச்சை பேச்சு!

அர்ஜுனன் அம்பில் தாக்கி அழிக்கும் அணு ஆயுதம் இருந்ததாக மேற்கு வங்க ஆளுனர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியை அம்மாநில ஆளுனர் ஜெக்தீப் தங்கர் தொடங்கி வைத்தார். அப்போது விழா மேடையில் பேசிய அவர் ’ராமாயண காலத்திலேயே விமானங்கள் இருந்ததாகவும், அர்ஜுனன் உபயோகித்த அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறிய அவர் ராமர் கற்பனை கதாப்பாத்திரம் அல்ல. உண்மையாக வாழ்ந்தவர் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அறிவியல் கண்காட்சியில் அவர் பேசியுள்ள இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.