வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (17:29 IST)

ஆஸ்திரேலியாவுக்கு 256 இலக்கு: இந்திய பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது
 
தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 10 ரன்களில் அவுட்டான போதிலும், தவான் மற்றும் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார்கள் தவான் 74 ரன்களும் கேஎல் ராகுல் 47 ரன்களும் எடுத்திருந்த நிலையில் தங்களுடைய விக்கெட்டுகளை இழந்தனர்.
 
இதனை அடுத்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். இருப்பினும் இந்திய அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மிக அருமையாக பந்துவீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளையும் ஜாம்பா மற்றும் ஆகார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் 256 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி, குல்திப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்