புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (08:46 IST)

350 அடி உயர அம்பேத்கர் சிலை: மகாராஷ்டிரா அரசு முடிவு!

மகாராஷ்டிராவில் சட்ட மேதை அம்பேத்கருக்கு 350 அடி உயரத்துக்கு சிலை நிறுவ மகாராஷ்டிர சட்ட சபையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நிறுவியவரும், இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவருமான அம்பேத்கர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். அவருக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 350 அடிக்கு சிலை அமைக்க மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார் “முதலில் 250 அடிக்கு சிலை அமைக்க திட்டமிட்டிருந்தோம். தற்போது அது 350 அடியாக உயர்த்தி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தரைதளத்தில் 100 அடிக்கு அம்பேத்கர் குறித்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. அதனால் மொத்தமாக சிலையின் உயரம் 450 அடியாக இருக்கும். இந்த சிலை இரண்டு வருடங்களில் நிறுவப்படும்” என கூறியுள்ளார்.