1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (19:48 IST)

மிகப்பெரிய கனவை நினைவாக்கவே இந்த கூட்டணி - ராஜினாமாவுக்கு பிறகு மெஹபூபா முப்தி பேட்டி

மிகப்பெரிய கனவை நினைவாக்கவே பாஜக- மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அமைக்கப்பட்டதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மெஹபூபா தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக- மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
 
சமீபகாலமாக காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் மெகபூபா அரசுக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்நிலையில், ராஜினாமா கடிதத்தை அளூநரிடம் கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மெஹபூபா முப்தி கூறியிருப்பதாவது:- 
 
“ பாஜக கூட்டணியை முறித்ததில் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. மிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. இருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம் ஆகிய உயரிய நோக்கங்கள் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணி இது. எனது ராஜினாமா கடித்தத்தை கவர்னரிடம் சமர்பித்தேன். 
 
ஜம்மு காஷ்மீரில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முயற்சிக்கவில்லை என ஆளூநரிடம் தெரிவித்துள்ளதாக” கூறியுள்ளார்.