1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (18:20 IST)

கருப்பு நெருப்பு அணையாது - மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

பிரதமர் மோடி சென்னை வந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக திமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, திமுக தரப்பில் கருப்பு பலூன் பறக்கவிடுதல், பேரணி என போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 'மோடியே திரும்பி செல்' என்ற வாசகம் எழுதப்பட்ட ராட்சத பலூனை அமைத்தும் மோடிக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அதேபோல், காவிரி மீட்பு பயணம் என்கிற தலைப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  நடைபயணத்தை தொடங்கியுள்ளார். மேலும், திமுக முன்னாள் மேயர் ம.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்நிலையில், ஸ்டாலினின் டிவிட்டர் பக்கத்தில் “விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது! #GoBackModi” என பதிவு வெளியிடப்பட்டுள்ளது.