1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (10:25 IST)

மோடி தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

18 ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். 

 
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதன்பின் ஜூலை 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவித்தார். அதாவது 19 நாட்கள் அவை நடைபெறும். 
 
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்துகிறது. 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன.