1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (19:36 IST)

பேருந்தில் பயணிகளுக்கு சரமாரி அடி, உதை : பரபப்பு சம்பவம்

கேரளாவில் தனியார் நிறுவன பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஆனால் எதிர்பாராத விதமாக ஹரிபதம் பகுதியில் என்ஜின் கோளாறு காரணமாக நின்றது. இதனையடுத்து பயணிகளிடம் மாற்று பேருந்து வரும் என்று கூறியுள்ளனர் பேருந்து ஊழியர்கள்.
ஆனால் பேருந்து வர தாமதமானது. இதற்கு மூன்று பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்  மாற்றுப் பேருந்து வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிறுவன அலுவலகத்துக்குச் சென்றுள்ளது.
 
அதன் பின்னர் பேருந்து நிறுவன மேலாளருடன் இரு ஊழியர்கள் சேர்ந்து கொண்டு எதிர்த்துப் பேசிய 3 பயணிகளை அடித்துள்ளனர்.
 
இதில் பலத்த காயமடைந்ததுடன் போலீஸ் ஸ்டேசனின் பேருந்து ஊழியர்கள். மேலாளர் மீது புகார் கொடுத்தனர்.
 
இதனையடுத்து பயணிகள் தாக்கப்படும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியது.
 
பயணிகளைத் தாக்கிய ஊழியர்கள், மேலாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிண்றனர்.