திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (14:40 IST)

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடலாம்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தின்கரன் தரப்பிற்கு எதிராக தீர்ப்பு வெளியானதால், 18 பேரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளனர். மேலும், இது குறித்து மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில் நேற்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் இன்னும் 5 வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என செய்திகள் வெளியாகின. 
 
இதனையடுத்து தேர்தல் தலைமை அதிகாரி இது குறித்து கூறியது பின்வருமாறு, தகுதி நீக்க வழக்கு தீர்ப்பில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை எனில் உடனடியாக இடைத்தேர்தல் பணிகள் துவங்கப்படும்.
 
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால், 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவித்துள்ளார்.