விசாகப்பட்டிணம் விஷவாயு விபத்து; தென்கொரிய சிஇஓ உள்பட 11 பேர் கைது!
விசாகப்பட்டிணம் எல்ஜி பாலிமர்ஸ் ஆலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக தென்கொரிய சிஇஓ உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 7ம் தேதி அதிகாலை வேளையில் விசாகப்பட்டிணம் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையிலிருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அருகாமையில் வசித்த பலர் மூச்சு திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரசாயன ஆலை விபத்து தொடர்பாக நிர்வாக இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் தென் கொரியாவை சேர்ந்த எல்ஜி பாலிமர்ஸ் நிறுவன சிஇஓ-வும் ஒருவர். இவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில் மக்கள் வாழும் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மக்கள் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்வது குறித்தும் முடிவுகள் எடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.