செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (13:31 IST)

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு.. பிரதமர் மோடி பரிசீலனை

Vinesh Phogat
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு  பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார் என்றும், மேலும் வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் எனவும் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டியிடம் சில விவரங்கள் கேட்டறிந்து அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
முன்னதாக 50 கிலோ எடை மல்யுத்த பிரிவில் அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்பேட்டைக்கு போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டி அவரே தகுதி நீக்கம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran