ரோவர் கருவி எங்கிருக்கு? மீண்டும் உயிர்பெரும் விக்ரம் லாண்டர்...
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர் கருவி உடையாமல் இருப்பதாக சண்முக சுப்பிரமணியன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. இதில் இருந்த விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் கருவி தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்தது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மென்பொறியாளர் சண்முக சுப்பிரமணியன், நாசா எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து விக்ரம் லேண்டர் இருப்பிடம் குறித்த தகவலை வெளியிட்டார். இதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து தற்போது ரோவர் கருவி உடையாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆம், நிலவின் மேற்பரப்பில் இருந்து 2 மீட்டர் ஆழத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாவும் ரோவர் கருவி அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், மென்பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.