1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Prices Drop in Chennai: Latest Rates for Gold and Silver

தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் குறைவு.. இன்னும் குறையுமா?

தங்க விலை நிலவரம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,520 என்ற விலையில் இன்று விற்பனையாகிறது. 
 
தூய தங்கமான 24 காரட் தங்கத்தின் விலையும் இன்று மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.13,658-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.1,09,264-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் இன்று குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.256.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,56,000 ஆக உள்ளது. 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கனமழையால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் ரத்து.. குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை..!