வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (09:15 IST)

சந்திரனை தொட்டது யார் நான்தானே..! – சந்திரயான் 3 அனுப்பிய நிலவின் வீடியோ!

Chandrayaan 3
இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான் 3 நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் புகுந்துள்ள நிலையில் படமெடுத்து அனுப்பிய நிலவின் வீடியோ வைரலாகியுள்ளது.



இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்தவதற்காக சந்திரயான் திட்டத்தை தொடங்கியது. இதில் முன்னதாக சந்திரயான், சந்திரயான் 2 ஆகிய விண்கலங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்திரயான் 2 திட்டம் கடைசி சில வினாடிகளில் தோல்வியை தழுவியது.

அதிலிருந்த குறைகளை சரிசெய்து தற்போது சந்திரயான் 3 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியுள்ளது இஸ்ரோ. கடந்த ஜூலை 15ம் தேதி புறப்பட்ட சந்திரயான் 3 பூமியை சிலமுறை சுற்றி பின்னர் அதிலிருந்து விலகி நிலவின் சுற்றுப்பாதைக்குள் புகுந்து சுற்றுவட்டத்தை குறைத்து மெல்ல நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

தற்போது நிலவின் சுற்றுப்பாதைக்குள் புகுந்து சுற்றி வரும் சந்திரயான் 3 நிலவை மிக அருகில் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளது. இந்த வீடியோவை இஸ்ரோ பகிர்ந்துள்ள நிலையில் பலரும் ஆர்வத்துடன் நிலவின் வீடியோவை கண்டு வருகிறார்கள். இந்த திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்தால் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா இருக்கும்.

Edit by Prasanth.K