1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (18:44 IST)

'சந்திரயான் 3 ''பயணத்தின் தொடக்கம் வெற்றி!- டாக்டர் ராமதாஸ்

ramadass
நிலவை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாக  தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தில் நிலவில் இறங்கி சாதனை படைக்க வாழ்த்துகள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு விண்கலம் அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் சந்திரயான் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக சந்திரயான் 1 மற்றும் 2 விண்கலங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டன.

இதில் சந்திரயான் 2 நிலவில் இறங்க இருந்த சில வினாடிகளுக்கு முன்பாக தொடர்பை இழந்தது. இந்நிலையில் இன்று   ஆந்திர மாநிலயம் ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதலுக்கான நேற்று மதியம் 2”30 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக விண்ணியில் சீறிப் பாய்ந்தது நிலவை நோக்கிப் பயணக்கத் தொடங்கியது  இஸ்ரோவின் ‘’சந்திராயன் 3’’ விண்கலம்.

இதுகுறித்து பாமக முன்னாள் தலைவரும் மருத்துவருமான ராமதாஸ் ததன் டுவிட்டர் பக்கத்தில்,

நிலவை ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாக  தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தில் நிலவில் இறங்கி சாதனை படைக்க வாழ்த்துகள்.  இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது.  இந்த சாதனைக்கு காரணமான இஸ்ரோ  அறிவியலாளர்கள், பிற பணியாளர்கள் அனைவருக்கும்,  குறிப்பாக, சந்திரயான் 3  திட்ட இயக்குனரான  எங்கள் மாவட்டத்து மைந்தர் வீரமுத்துவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.