வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (16:00 IST)

தர்பாரரை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் உறுதியானது? இயக்குனர் இவர் தானா?

ரஜினியின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 
 
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக்கி இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமர் இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி உள்ளார். இவர்களின் சந்திப்பால் ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏனென்றால், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து  சுமார் 1 மணி நேரம் அவருக்காக உருவாக்கிய கதையை  கூறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படையப்பா, முத்து படங்கள் இவர்களது கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்ப்பை பெற்றதையடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் "தர்பார்" படத்தை முடித்த பிறகு கேஎஸ் ரவிக்குமார் - ரஜினி கூட்டணியில் தலைவர் 167 படம் உருவாகும் என கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த சந்திப்பின் போது கே.எஸ்.ரவிக்குமாரை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.