வாரணாசி கிரிக்கெட் மைதானம் சிவனுக்கு சமர்ப்பிக்கப்படும்- பிரதமர் மோடி
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆன்மீக நகரான வாரணாசியில் உருவாகி வரும் மைதானம் சிவனுக்கு சமர்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் அமைய உள்ள மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று (செப்டமர் 23 ஆம் தேதி )அடிக்கல் நாட்டினார். இந்த மைதானம் ரூ.450 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.
இதுகுறித்து இன்று பிரதமர் கூறியதாவது: சிவனின் அம்சங்களுடன் புதிய கிரிக்கெட் மைதானம் வாரணாசியில் உருவாகும் நிலையில், இந்த மைதானம் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், சச்சின், ரவி சாஸ்திரி உடனிருந்தனர்,.
இந்த சர்வதேச மைதானம் அமையவுள்ளதற்கு உபி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.