ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (13:17 IST)

அதிமுகவை மீண்டும் பாஜகவிடம் அடகுவைக்க காத்திருக்கிறார்கள்-கே.சி.பழனிசாமி

kc palanisamy
,
தமிழக முன்னாள் முதல்வர்அண்ணா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அண்ணாமலை மறுத்த  நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுசாமி, சிவி சண்முகம், விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அண்ணாமலை பற்றி புகாரளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் டில்லியில் முகாம்.அமித்ஷாவை சந்திக்க டெல்லியில் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி., கே.சி. பழனிசாமி தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’அதிமுக என்பது தனித்துவம் வாய்ந்த ஆளுமைமிக்க தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. வீராவேசமாக கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு பின்னர் எடப்பாடியை முதல்வராக அறிவிக்கவேண்டுமென்று செல்லூர் ராஜு மூலமாக கோரிக்கை வைத்து அதற்க்கு அண்ணாமலை பாராளுமன்றத்திற்கு உங்களை பயன்படுத்திக்கொள்வோம் சட்டமன்றத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் அறிவித்த பிறகு டெல்லிக்கு காவடி தூக்கும் நவீன தரகர்கள்.

இவர்கள் ஐவரும் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை மீண்டும் பாஜகவிடம் அடகுவைக்க காத்திருக்கிறார்கள்.ஆனால் தன்மானமிக்க அதிமுக தொண்டர்கள் இதை ஏற்கமாட்டார்கள்.பாஜக போட்டியிடும் அணைத்து தொகுதியிலும் படுதோல்வி அடையச்செய்வார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.