1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (16:40 IST)

மக்கள் பிரதிநிதிக்கே இந்த அவமானமா? ஆவேசம் அடைந்த பீட்டர் அல்போன்ஸ்..!

இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மக்களவையின் மூத்த உறுப்பினர் குன்வார் டேனிஷ் அலியை சமீபத்தில் பாஜக எம்பி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் ஆவேசமாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 

இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மக்களவையின் மூத்த உறுப்பினர் குன்வார் டேனிஷ் அலியை, சந்திராயன் பற்றிய விவாதத்தின்போது ‘விபச்சார தரகர்’ ‘சுன்னத் செய்த உறுப்பினர்’ ‘பயங்கரவாதி’ ‘இஸ்லாமிய தீவிரவாதி’ என்றெல்லாம் தரக்குறைவாக பேசிய பாஜக உறுப்பினர் மீது மக்களவை சபாநாயகரும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாட்டின் பிரதமர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமரும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர்?
 
பாராளுமன்றத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு இந்த அவமானம் என்றால் சாதாரண இஸ்லாமியக் குடிமகனின் நிலை என்ன? இந்தியஜனநாயகம் எங்கேபோகிறது?

என கூறியுள்ளார்.
 
Edited by Mahendran