வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (07:59 IST)

புத்தாண்டில் 12 பேர் பரிதாப பலி: வைஷ்ணவ கோவில் நெரிசலில் சிக்கியதாக தகவல்

புத்தாண்டில் 12 பேர் பரிதாப பலி: வைஷ்ணவ கோவில் நெரிசலில் சிக்கியதாக தகவல்
உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றைய புத்தாண்டு தினத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்ய வந்திருந்தனர். 
 
இந்த நிலையில் திடீரென பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து அதில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயம் ஆனதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது