வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (13:38 IST)

பாஜகவுக்கு காலை வாரிவிட்ட உத்தரபிரதேசம்.. சமாஜ்வாடி ஜனதா கட்சி அபார வெற்றி..!

உத்தரப்பிரதேசம் என்பது பாரதிய ஜனதாவின் கோட்டை என்றும் குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பின்னர் பாஜகவுக்கு பெரும் ஆதரவு அம்மாநிலத்தில் இருந்தது என்றும் கூறப்பட்டது.

ஆனால் இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது உத்தரப்பிரதேசம் மாநிலம் தான் பாஜகவின் காலை வாரிவிட்டது என்பது தெரிய வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் இருந்த நிலையில் இருக்கும் நிலையில் அதில் 36 தொகுதிகளில் சமாஜ் வாடி கட்சி முன்னிலையில் உள்ளது. பாஜக மாநிலத்தில் 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பீகாரில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜக எதிர்பார்த்த நிலையில் அம்மாநிலத்தில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஜனதா தளம் அங்கு 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் முழுமையாக வெற்றி கிடைக்கும் என்று பாஜக எதிர் பார்த்த நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் பாஜக 14 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva