1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (14:26 IST)

கும்பமேளாவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்.. அமைச்சர்கள் புனித நீராடவும் திட்டம்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. கும்பமேளா நடைபெறும் இடத்தில், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, முதலமைச்சருடன் அனைத்து அமைச்சர்களும் திரிவேணி சங்கத்தில் புனித நீராட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி, தற்பொழுது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கும்பமேளா நடைபெறும் இடத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட 54 அமைச்சர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரயாக்ராஜ் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் இந்த சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. உள்கட்டமைப்பு திட்டங்கள், கங்கா எக்ஸ்பிரஸ் வே நீட்டிப்பு, மற்றும் அதிவேக நெடுஞ்சாலை இணைப்புகள் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

கூட்டம் முடிந்த பின்னர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் திரிவேணி சங்கத்தில் புனித நீராட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Mahendran