செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2025 (16:53 IST)

ஈ சாலா கப் நமதே.. கும்பமேளாவில் ஆர்சிபி ஜெர்சியை வைத்து வழிபாடு! - வைரலாகும் வீடியோ!

RCB Jersey

பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் ஆர்சிபி ரசிகர் ஒருவர் ஜெர்சியை நனைத்து சிறப்பு வேண்டுதல் வைத்த வீடியோ வைரலாகியுள்ளது.

 

 

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடந்து வரும் நிலையில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ரசிகர் ஒருவர் வைத்த சிறப்பு வேண்டுதல்தான் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

 

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதலாக இருந்து வரும் பெரிய அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஆரம்ப காலம் முதலாக அந்த அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வரும் நிலையில், ஒருமுறையாவது ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அந்த அணி ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது.

 

ஆனால் கடந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஆர்சிபி கோப்பை வெல்லவில்லை. ஐபிஎல் தொடங்கும் சமயங்களில் ரசிகர்கள் இதற்காகவே கோவில்களில் வேண்டுதல் வைப்பது, நேர்த்திக்கடன் வைப்பது என செய்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் ஆர்சிபி ஜெர்சியை நனைத்து ஆர்சிபி ரசிகர் வைத்த வேண்டுதல் ஆர்சிபி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K