திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மே 2021 (10:18 IST)

எங்கள ரிலீஸ் பண்ணாதீங்க.. ஜெயில்லயே இருக்கோம்! – கதறும் கைதிகள், அதிர்ச்சியில் அதிகாரிகள்!

உத்தர பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக கைதிகள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டும் கைதிகள் செல்லாமல் அடம்பிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் சிறை சாலைகளிலும் கூட கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் மாநில அரசுகள் பல கைதிகளை பரோலில் அனுப்ப அனுமதி வழங்கியுள்ளன.

அவ்வாறாக உத்தர பிரதேசத்திலும் கைதிகள் பரோலில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியே சென்றால் தங்களுக்கு கொரோனா பரவி விடும் என பயந்த 20 கைதிகள் வெளியே செல்ல மாட்டோம் என அதிகாரிகளிடம் கூறி, சிறையை விட்டு வெளியேற மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.