வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (09:09 IST)

கொரோனா மருத்துவ செலவிற்கு பிணையில்லா கடன்: வங்கிகள் முன்வந்துள்ளதாக தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில மருந்து செலவுகளை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனாவால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்காக பிணையில்லா கடன் வழங்க ஒரு சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. கொரோனா மருத்துவச் செலவிற்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை பிணையில்லா கடன்களை வழங்க ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் முன் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வங்கிகளில் கொரோனா மருத்துவ செலவிற்காக வழங்கப்படும் கடனுக்கு 8.5% வட்டி வசூலிக்கப்படும் என்றும் அந்த கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் மேற்கண்ட வங்கிகள் அறிவித்துள்ளன. கொரோனா மருத்துவ செலவினங்களுக்காக இந்த கடனை பெற்றுக்கொள்ளலாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.