வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (14:36 IST)

முஸ்லீம் முதியவர் மீது தாக்குதல்? – சர்ச்சையான நிலையில் காவல்துறை விளக்கம்!

உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் பொது இடத்தில் பலரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதியவரை தாக்கியவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றும், மதரீதியாக அவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள உத்தர பிரதேசம், சம்பந்தபட்ட முதியவர் உத்தர பிரதேசத்தில் மாந்திரீக வேலைகளில் ஈடுபடுபவர் என்றும், முதியவர் கொடுத்த தாயத்தால் பிரச்சினைகள் தீராததால் தாயத்துக்கு பணம் கொடுத்தவர்கள் அவரை அடித்ததாகவும், அடித்தவர்களில் இந்து, இஸ்லாமியர்கள் இருவருமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் முதியவரை தாக்கியது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.