திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (12:23 IST)

நீதிமன்றத்தில் புகுந்து தாக்கிய சிறுத்தை; சிதறி ஓடிய மக்கள்! – அதிர்ச்சி வீடியோ!

Leopard
உத்தர பிரதேசத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்களை ஆவேசமாக தாக்கிய காட்சிகள் வைரலாகியுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றம் வழக்கம்போல செயல்பட்டு வந்த நிலையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் அங்கு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுத்தை ஒன்று நீதிமன்றத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உள்ளே நுழைந்த சிறுத்தை கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்க தொடங்கியுள்ளது. இதனால் பீதியில் அலறியவாறு மக்கள் நாலா புறத்திலும் தெறித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து அறிந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், நீதிமன்றத்திற்குள் புகுந்து சிறுத்தை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K