வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2023 (16:45 IST)

கர்ப்பத்தை கண்டறியும் கருவி வைத்திருந்த மகளை கொன்ற பெற்றோர் கைது!

உத்தரபிரதேச மாநிலத்தில் மகளின் பையில் கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கும் கருவி இருந்ததால் அவரை பெற்றோர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கவுசம்பி அருகிலுள்ள  அலம்பாத் என்ற கிராமத்தில் வசிப்பவர் நரேஷ். இவரது மனைவி ஷோபா.

இந்த தம்பதிக்கு 21 வயதில் மகள் இருந்தார். இவரது மகள் பல இளைஞர்களுடன் போனில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மகலின் பையில் இருந்து கர்ப்பத்தைக் கண்டறியும் கருவி இருந்ததைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தன் மகளுக்குப் பலருடன் தொடர்ப்பு இருப்பதைப் பார்த்து அவரை பெற்றோர் கொன்றுவிட்டனர்.

இது வெளியில் தெரியாமல் இருக்க, நரேஷ் தன் மகளைக் காணவில்லை என்று புகாரளித்து நாடகமாடினார்.

பின்னர், கிராமத்திற்கு வெளியில் ஒரு இளம்பெண் சடலம் கண்டறியப்பட்டது.

அது, நரேஷின் மகள் என்று அடையாளம் காணப்பட்டது. அவரிடம் விசாரித்த போது, தன் மகள் பையில் கர்ப்பத்தை கண்டறியும் கருவி இருந்ததால் கொன்றதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, அவரையும் அவரது மனைவி ஷோபாவையும் கைது செய்துள்ளனர்.

மேலும், பெண்ணின் சகோதரர்கள்  இருவரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்து பெண்ணின் உடல் மீது ஆசிட் வீசியதாக அவர்களையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.