1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (11:54 IST)

நாக்கை அறுத்து, எலும்புகளை உடைத்து... ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன??

உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண்ணுக்கு நடத்தப்பட்ட கொடுமை பலரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. 
 
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ண்டஹ் 19 வயது இளம் பெண் வயல் வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த போது அக்கிராமத்தை சேர்ந்த நான்கு கொடூரர்களால் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்.14 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் இத்தனை நாள் உயிருக்கு போராடிய அந்த பெண் நேற்று மரணமடைந்தார். 
 
அந்த நான்கு கொடூரர்கள் இளம்பெண்ணை பாலத்காரம் செய்ததோடு உண்மையை வெளியில் சொல்லாமல் இருக்கு பெண்ணின் நாக்கை வெட்டியுள்ளனர். மேலும், முதுகெலும்பு, கழுத்து உள்ளிட்டவற்றை கடுமையாக தாக்கி உடைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவத்தை போலீஸார் முதலில் பெரிதாக எடுக்கவில்லை என குடும்பத்தார் குற்றம்சாட்டிய நிலையில், நேற்று மரணிக்கும் முன் அந்த பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என தெரிகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும் அந்த பெண் மரணித்ததும் அவரது உடல் சொந்த கிராமத்துக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. போலீசார் அவசர அவசரமாக இரவிலேயே உடலை தகனம் செய்ய அந்த பெண்ணின் குடும்பத்தாரை வற்புறுத்தியதாக புகாரும் எழுந்துள்ளது.